பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) கிரிக்கெட் போட்டியின் மூலம் பங்களாதேஷில் 2020 கிரிக்கெட்டில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், கடும் விமர்சனத்துடன் தான் இதனை வெளிப்படுத்துவதாகவும் சந்திக ஹதுருசிங்க தெரிவித்துள்ளார்.
பிரபல கிரிக்கெட் இணையதளமான ‘கிரிக்இன்ஃபோ’வில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
BPL போட்டியில் முக்கிய துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு பாத்திரங்களில் பங்களாதேஷின் பிரதிநிதித்துவம் மிகவும் மோசமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல அணிகள் போட்டிகளில், முக்கிய பங்கு வகிக்க வெளிநாட்டு வீரர்களை நம்பியுள்ளதாக சந்திக ஹத்துருசிங்க சுட்டிக்காட்டியிருந்தார்.
“இது எனக்கு விசித்திரமாக இருக்கிறது. சில சமயங்களில் BPL பார்க்கும்போது டிவியை ஓப்f செய்து விடுவேன். தற்போதைய அமைப்பில் எனக்கு ஒரு பெரிய பிரச்சினை உள்ளது. இதில் ஐசிசி தலையிட வேண்டும்..” என்றார்.
பங்களாதேஷ் வீரர்கள் முதல் மூன்று துடுப்பாட்ட வீரர்கள் இடையே துடுப்பெடுத்தாட வேண்டும் எனவும், பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களும் போட்டியில் முன்னணி வகிக்க வேண்டும் எனவும் சந்திக ஹதுருசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஆண்டு நடந்த BPL போட்டியில், Chattogram Challengers, Sylhet Strikers மற்றும் Durdanto Dhaka ஆகிய மூன்று அணிகளும் தங்களது துடுப்பாட்ட பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்கு வெளிநாட்டு வீரர்களையே பயன்படுத்தின.
இந்த செயல்முறையின் மூலம் பங்களாதேஷ் இருபதுக்கு 20 கிரிக்கெட் அணியானது உலகின் மற்ற கிரிக்கெட் அணிகளுடன் எழுந்து நிற்கும் என நம்ப முடியாது என சந்திக ஹதுருசிங்க இறுதியாக தெரிவித்துள்ளார்.
சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான 03 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் மார்ச் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் பின்வரும் தருணங்களை குறிப்பிட்டுள்ளமை விசேட அம்சமாகும்.