கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது தேர்தல் மோசடி குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர்.
தேர்தல் மோசடிகள் மற்றும் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக இராணுவ அரசாங்கத்தினால் அவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
ஆங் சான் சூகி, மட்டுமின்றி முன்னாள் அதிபர் வின் மைன்ட் மற்றும் மியான்மர் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஆகியோர் மீதும் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி இராணுவக் கிளர்ச்சியின் மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர், ஆங் சான் சூ கி பொதுவௌியில் பிரசன்னமாகவில்லை.
அவரது வழக்கு விடயம் தொடர்பாக பொதுவௌியில் பேசுவதற்கு, இராணுவ ஆட்சியாளர்களால் தமக்கு தடையேற்படுத்தப்படுவதாக ஆங் சான் சூ கியின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.