இலங்கை மத்திய வங்கி பான் ஏசியா வங்கிக்கு முதன்மை வியாபாரியாக செயற்படுவதற்கு வழங்கப்பட்ட உரிமத்தை இடைநிறுத்தியுள்ளது.
இதனை Pan Asia வங்கி கொழும்பு பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ளது.
இந்த இடைநிறுத்தம் பெப்ரவரி 15 முதல் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உரிமம் இடைநிறுத்தம் வங்கியின் இயல்பான செயல்பாடுகள் மற்றும் இரண்டாம் நிலை சந்தை பரிவர்த்தனைகளை பாதிக்காது என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.