follow the truth

follow the truth

March, 17, 2025
Homeஉள்நாடுஅதிக ஆபத்துள்ள பகுதிகளில் வாழும் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு பிரதமர் பணிப்புரை

அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வாழும் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு பிரதமர் பணிப்புரை

Published on

அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் 12,000 குடும்பங்களை விரைவில் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் பாராளுமன்ற குழு அறையில் இன்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்குவது தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பிரதமர் இதன்போது கேட்டறிந்தார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் ஏற்கனவே 21 மாவட்டங்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாகவும் முதற்கட்ட இழப்பீடு வழங்கும் நடவடிக்கை தாமதமின்றி நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

சுமார் 15,000 குடும்பங்கள் அதிக அபாயம் மிகுந்த பிரதேசங்களில் நீண்டகாலமாக வாழ்ந்து வருவதாகவும், ஆனால் இதுவரை 3,000 குடும்பங்கள் மாத்திரமே வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இதன்படி, தற்போது அதிக ஆபத்துள்ள பிரதேசங்களில் வாழும் 12,000 குடும்பங்களை விரைவில் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஆபத்தான சூழ்நிலையை கண்டறிந்து, அதற்கேற்ப முன்னுரிமை அளித்து, இந்த மக்களை ஆபத்தில் இருந்து மீட்க திட்டமிடவும் பிரதமர் அறிவுறுத்தினார்.

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் அனர்த்தங்கள் நீண்டகாலமாக இனங்காணப்பட்டு வருவதால் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஏற்றவாறு குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது பொருத்தமானது என அமைச்சர் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

கொழும்பு கண்டி பிரதான வீதி கடுகன்னாவையுடன் மூடுவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. தற்போதைய நிலைமைக்கு தீர்வாக தற்போதுள்ள பாதையை ஒருவழிப் பாதையாக போக்குவரத்திற்காக திறப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறும், அவ்வாறு இன்றேல் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள மாற்று வழி பாதையை விரைவில் அபிவிருத்தி செய்யுமாறும் பிரதமர் இதன்போது நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிராண்ட்பாஸ் இரட்டைக் கொலை – 8 பேர் கைது

கிராண்ட்பாஸ் இரட்டைக் கொலை வழக்கில் இதுவரைக்கும் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 15 ஆம் திகதி கிராண்ட்பாஸ்...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று முதல் ஏற்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (17) ஆரம்பிக்கப்படவுள்ளது. இன்று முதல் 20 ஆம் திகதி நண்பகல்...