2024 டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பு ரோஹித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
ராஜ்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இதனை வலியுறுத்தினார்.
2022 டி20 உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணியை வழிநடத்திய ரோஹித் சர்மா, இந்த முறை இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியில், அரையிறுதியில் இங்கிலாந்திடம் இந்தியா தோல்வியடைந்தது.
அதன்பிறகு ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் பங்கேற்கவில்லை, 2023ல் அவர் ஒரு டி20 போட்டியில் கூட விளையாடவில்லை.
ஆனால் 2024 ஜனவரியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கு அவர் தலைமை தாங்க அழைக்கப்பட்டார்.
அந்த போட்டியில் பதிவான சதத்தின் மூலம் ரோஹித் சர்மா இருபதுக்கு 20, 05 சதங்களை பதிவு செய்த உலகின் ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றார்.
முன்னதாக இந்திய டி20 அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் இருந்தது.