இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 07 விக்கெட்டுக்களால் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் கெப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி முதலில் துடுப்பாட்டம் செய்ய முடிவு செய்தார்.
அதன்படி, ஆப்கானிஸ்தான் அணிக்கு 266 ஓட்டங்கள் என்ற ஸ்கோர் போர்டை உருவாக்க முடிந்தது.
பதில் இன்னிங்ஸிற்காக களம் இறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 03 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து பூர்த்தி செய்தது.
பெத்தும் நிஸ்ஸங்க மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை பெற்றுக் கொடுத்த போது, அவிஷ்க பெர்னாண்டோ துரதிஷ்டவசமாக 91 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
பெத்தும் 16 பவுண்டரிகள் மற்றும் 02 சிக்ஸர்களுடன் ஒரு அமைதியான சதத்துடன் 118 ஓட்டங்களை எடுத்தார்.
குசல் மெண்டிஸ் 4 சிக்ஸர்களுடன் 40 ஓட்டங்களை குவித்தார்.
அதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 03க்கு 0 என்ற கணக்கில் இலங்கை அணி முழுமையான வெற்றியைப் பதிவு செய்தது.