இந்திய நகரங்களிள் உள்ள பிரதான வீதிகளில் உள்ள அசைவ உணவுக் கடைகளை அகற்றுவதற்கு அஹமதாபாத்தில் உள்ள அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்
அகமதாபாத்தில் உள்ள அதிகாரிகள் பிரதான வீதிகளில் இருந்து அசைவ உணவுக் கடைகளை அகற்ற உத்தரவிட்டுள்ளனர் . மேற்கு இந்திய மாநிலமான குஜராத்தில் சமீபத்திய நாட்களில் பிரதான வீதிகளில் உள்ள அசைவ உணவுக் கடைகளை அகற்றும் நான்காவது நகரமாக அஹமதாபாத் உள்ளது
அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் நகரின் முக்கிய வீதிகள் மற்றும் பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களிலிருந்து100 மீட்டர் (330 அடி) சுற்றளவில் அசைவ உணவுப் பொருட்களை விற்கும் கடைகளை அகற்றுவதாகக் கூறியது.
இந்த உத்தரவை இன்று முதல் அமுலாகும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.