follow the truth

follow the truth

March, 17, 2025
Homeஉள்நாடுசர்வதேச நாணய நிதியத்தை நாடுவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவில்லை

சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவில்லை

Published on

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவது குறித்து அரசாங்கம் இதுவரை எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என எரிசக்தி அமைச்சர், அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று (16) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, நேற்றைய (15) தினம் அமைச்சரவையில், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவது குறித்து கலந்துரையாடப்பட்ட போதிலும், அதனைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து அமைச்சர்கள் நீண்ட நேரம் கலந்துரையாடினார்கள். கடன் பெறுவது குறித்து இதுவரையிலும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிராண்ட்பாஸ் இரட்டைக் கொலை – 8 பேர் கைது

கிராண்ட்பாஸ் இரட்டைக் கொலை வழக்கில் இதுவரைக்கும் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 15 ஆம் திகதி கிராண்ட்பாஸ்...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று முதல் ஏற்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (17) ஆரம்பிக்கப்படவுள்ளது. இன்று முதல் 20 ஆம் திகதி நண்பகல்...