மக்கொன பிரதேசத்தில் ஒருவர் ரயிலுடன் மோதுண்டமையினால் கரையோர ரயில் பாதை சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக களுத்துறை ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .
இதன் காரணமாக, ருஹுணு குமாரி மற்றும் காலிகுமாரி கடுகதி ரயில்கள் முறையே 35 மற்றும் 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.