follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுதிருடர்களுடன் எங்களுக்கு டீல் இல்லை

திருடர்களுடன் எங்களுக்கு டீல் இல்லை

Published on

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையாகும். இதில் உருவாக்கப்பட்ட ஏகாதிபத்தியமும், மகத்தான அதிகாரமும் இந்நாட்டு குடிமக்களின் உரிமைகளை மீறுவதால் இங்கு தெளிவான மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். இதனை இல்லாதொழிப்போம் என்ற போர்வையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு இடையூறு விளைவிக்க இடமளியோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை சரியான திகதியில் நடத்தாமல், அதற்கு நிதி ஒதுக்காது மக்களின் வாக்குரிமையை மீறும் அரசாங்கமே ஆட்சியில் இருக்கிறது. மக்களின் சர்வஜன வாக்குரிமையில் இத்தகைய தடைகளை ஏற்படுத்தி வரும் அரசாங்கத்திற்கு நாம் ஒத்துழையோம். தேர்தலில் மக்கள் ஆணையை காண்பிக்கும் உரிமையை வழங்கியதன் பின்னரே நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பல்வேறு தனிநபர்களும் குழுக்களும் ஜனாதிபதியின் ஒப்பந்தளுக்கு இனங்க நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தோட்டத்தை முன்வைத்து வருகின்றனர். இது தனிப்பட்ட அரசியல் வாழ்வை நீட்டிக்கும் முயற்சியே தவிர தேச நலனுக்காக இலக்காக் கொண்ட அபிலாஷை அல்ல என்றும் இதற்கு இடமளிக்க மாட்டோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் மாநாடு நேற்றைய (11) தினம் கொழும்பில் நடைபைற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய ஊழல் எதிர்ப்புச் சட்ட உள்ளடக்கம் போதுமானதாக இல்லாததால், அரசியலமைப்பின் மிகவும் உயரிய பகுதியாக, ஓர் எளிய பெரும்பான்மையால் மாற்ற முடியாத ஒரு கட்டமைப்பாக ஊழல் எதிர்ப்பு நிறுவகம் நிறுவப்பட நடவடிக்கை எடுக்கப்படும். எவரும், எந்த அதிகாரத்தாலும், செல்வாக்கு செலுத்த முடியாத முறைமை உருவாக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டை வங்குரோத்தாக்கியவர்கள் யார் என்பதை வெளிக்கொணர ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் சங்கமும், தேசிய அறிஞர்கள் பேரவையும் நடந்து கொண்டது போல, இந்நாட்டை அழித்த தரப்பினர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, எமது நாட்டிற்கு இழந்த வளங்களும் சொத்துக்களும் மீட்கப்படும். இந்நாட்டை அழித்த திருடர்களுடன் எங்களுக்கு எந்த வகையிலுமான டீல்களும் இல்லை என அவர் தெரிவித்தார்.

 WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரயிலுடன் மோதி 2 காட்டு யானைகள் உயிரிழப்பு

கொலன்னாவயிலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றிச்சென்ற ரயிலுடன் மோதி 2 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. காட்டு யானைகள் மோதியதில் ரயில்...

பன்றிகளுக்கு பரவும் வைரஸ் – மாவட்டங்களுக்கு இடையே கொண்டுசெல்ல தடை

பன்றிகளுக்குப் பரவிவரும் வைரஸ் தொற்று காரணமாக மாவட்டங்களுக்கு இடையே பன்றிகளை கொண்டுசெல்வது இன்று(18) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி,...

உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்குமாறு மீண்டும் அறிவித்தல்

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண...