follow the truth

follow the truth

December, 24, 2024
Homeஉள்நாடுஒரு பாணின் விலை ரூ.170?

ஒரு பாணின் விலை ரூ.170?

Published on

ஒரு பாணின் எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என கடந்த வாரம் அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் காரணமாக ஒரு பாணின் ஒன்றின் விலை 170 ரூபாவாக அதிகரிக்கலாம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

நாட்டில் மூன்று தரப்பினர் பாண் உற்பத்தியாளர்களாக இருப்பதாகவும், ஒரு குழு சிறிய அளவிலான பானை தாங்களே தயாரித்து விற்பனை செய்வதாகவும், தற்போதைய விலையான 140 ரூபாவிற்கு 450 கிராம் பாணினை விற்க முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மற்ற பகுதியினர் நடுத்தர அளவில் பாணை உற்பத்தி செய்து வியாபாரிகள் மூலம் கமிஷனுக்கு விற்பவர்கள். பெரிய தொழிலதிபர்கள் பெரிய அளவில் உற்பத்தி செய்து விற்கிறார்கள். இந்த இரு பிரிவினரும் ஒரு பாணுக்கு சுமார் 30 ரூபாய் கமிஷன் கொடுக்க வேண்டும். மேலும், பாணுக்கான பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.
இதன்காரணமாக இவ்விரு வகையினருக்கும் 450 கிராம் எடையுள்ள பாண் 160-170 ரூபா விலையில் விற்பனை செய்யப்பட வேண்டியுள்ளது. இதனால் சிறு உற்பத்தியாளர்கள் அதே விலையில் பாணினை விற்பனை செய்வது தவிர்க்க முடியாததாக உள்ளது என்றார்.

தனது உறுப்பினர்களுக்கு சரியான எடையுள்ள பாணை தயாரிக்க ஆலோசனை கூறலாம், ஆனால் அதிகபட்ச விலையை நிர்ணயிக்க முடியாது என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

அரசு அதிகபட்ச விலையை குறிப்பிடாததால், உற்பத்தியாளருக்கே விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் உள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மனோ கணேசன் ஜனாதிபதிக்கு கடிதம்

தோட்டங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் முயற்சியை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும்,...

பாதாள உலகக் குழுக்களை ஒடுக்க விசேட நடவடிக்கை

மீண்டும் தலைதூக்கும் பாதாள உலக குழுக்களை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த...

இந்த வருடத்தில் 546 இந்திய மீனவர்கள் கைது

மன்னாருக்கு வடக்கே கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இரண்டு இந்திய மீன்பிடி படகுகளை கைப்பற்றியதுடன் 17 இந்திய...