follow the truth

follow the truth

March, 12, 2025
HomeTOP1ரணிலுடன் இணையும் ராஜித!

ரணிலுடன் இணையும் ராஜித!

Published on

இன்று தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவின் வேலைத்திட்டத்தையே ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துச் செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குறிப்பிடுகின்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் தற்போது அதனையே பிரதிநிதித்துவப்படுத்தும் வேலைத்திட்டத்தில் இருப்பதாக அவர் கூறுகிறார்.

இந்த திட்டத்தில் சஜித் பிரேமதாசவா அல்லது ரணில் விக்கிரமசிங்கவா முதலில் சாதிப்பது எனபதில் தான் எல்லாமே தங்கியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தின் புதிய அமர்வின் ஆரம்பத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றத்தை புறக்கணித்த போதிலும், ராஜித சேனாரத்ன உள்ளிட்டோர் அந்த தீர்மானத்தை நிராகரித்து பாராளுமன்றத்தில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினுள் முறுகல் நிலை மற்றும் கருத்து முரண்பாடுகள் இடம்பெற்றும் வருகின்றது. இதில் சரத் பொன்சேகா அண்மைய நாட்களாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

மேலும், சரத் பொன்சேகா நேற்று முன்தினம் நாடாளுமன்ற புதிய அமர்வின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் கலந்துரையாடி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அபிவிருத்தியின் பலன்களை நியாயமாக அனுபவிக்கும்  சமூகத்தை உருவாக்குவதே அரசின் எதிர்பார்ப்பு 

அபிவிருத்தியின் முழு பலன்களையும் நியாயமாக அனுபவிக்கும்  வளமான சமூகத்தை கட்டியெழுப்புவதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்று ஜனாதிபதி அநுரகுமார...

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் 155,976 புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் 155,976 புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற...

O/L பரீட்சை – விதிமுறைகளை மீறினால் முறைப்பாடுகளை முன்வைக்கவும்

கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய சகல கற்பித்தல் செயற்பாடுகளும் இன்று(11) நள்ளிரவு முதல் தடை...