முந்திரி பயிர்ச்செய்கையில் காம்பியா பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை இலங்கைக்கு வழங்க இலங்கையின் காம்பிய தூதுவர் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இலங்கையைப் போன்று சிறிய விவசாய நாடாக காம்பியா காணப்பட்டாலும் கடலை, முந்திரி போன்ற பல பயிர்களில் தன்னிறைவு பெற்றுள்ளதாக இலங்கைக்கான காம்பிய தூதுவர் முஸ்தபா ஜவாரா விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் தெரிவித்தார்.
காம்பியாவில் விளையும் முந்திரி பருப்பு இந்தியா உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அதிக வருமானம் ஈட்டுகிறது காம்பியாவின் ஆற்றங்கரைகளின் இருபுறமும் முந்திரி அதிகளவில் பயிரிடப்படுவதாகவும் தூதுவர் குறிப்பிட்டார்.
புதிய வகை முந்திரி இனங்களை இனங்கண்டு நடவடிக்கை எடுக்காததே இந்நாட்டில் முந்திரிச் செய்கை வீழ்ச்சிக்குக் காரணம் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். எனவே, காம்பியாவில் முந்திரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஆதரவை வழங்குமாறு காம்பியா தூதுவரிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.