இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத், பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் அளித்த வாய்ப்பை நிராகரித்துள்ளார்.
ஹேரத், முன்னதாக 2001 டிசம்பரில் இரண்டு வருட ஒப்பந்தத்தில் பந்துவீச்சு பயிற்சியாளராக பங்களாதேஷ் அணியில் சேர்ந்தார், மேலும் அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பரில் முடிவடைந்தது. அதன்பிறகு, பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் புதிய பதவிக்கான முன்மொழிவை ஹேரத்திடம் சமர்ப்பித்திருந்தது.
பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் ஹேரத்துக்கு ஸ்பின்னிங் பயிற்றுவிப்பாளர் பதவியை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அந்த பதவியின்படி, வருடத்திற்கு சுமார் 200 நாட்கள் பங்களாதேஷை சுற்றி பல்வேறு வயதுப் பிரிவு வீரர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி வழங்குவது ஹேரத் இனது பொறுப்பாக இருந்தது.
முன்னதாக, இந்த பிரேரணை தொடர்பில் ஹேரத் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்ததுடன், அதற்கு விரைவில் பதிலளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். தேசிய கிரிக்கெட் அணியின் சுழல் பயிற்சியாளரை விட பல்வேறு வயது பிரிவுகளின் மெதுவான பந்துவீச்சாளர்களுடன் பணிபுரியும் சுழல் பயிற்றுவிப்பாளராக விளையாடுவதில் ஆர்வமாக இருப்பதாக அவர் அங்கு வலியுறுத்தினார்.
எவ்வாறாயினும், நேற்று இடம்பெற்ற வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்கள் ஆட்சேர்ப்புக் குழுவின் கூட்டத்திற்குப் பின்னர், பங்களாதேஷ் கிரிக்கெட் நடவடிக்கைகளின் தலைவர் ஜலால் யூனுஸ் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், பிரபல இலங்கை இடது கை சுழற்பந்து வீச்சாளர் மீண்டும் பங்களாதேஷ் கிரிக்கெட்டில் இணையத் தயாராக இல்லை.
“ஹேரத் எங்களுடன் இல்லை, நாங்கள் அவருக்கு வழங்கிய வாய்ப்பை அவர் ஏற்கவில்லை. அதனால் அவர் இப்போது நம்மிடையே இல்லை” என்று தெரிவித்திருந்தார்.