இலங்கை – ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் இன்று.
அங்கு பந்தை எதிர்கொள்ளும் போது, பந்து ஹெல்மெட்டில் பட்டதால் மைதானத்தை விட்டு வெளியேறிய சாமிக குணசேகரவிற்கு பதிலாக மற்றுமொரு வீரரை களமிறக்க இலங்கை அணி அனுமதி பெற்றுள்ளது.
இது சாமிகவின் அறிமுக டெஸ்ட் போட்டியாகும்.
அதன்படி வேகப்பந்து வீச்சாளர் கசுன் ராஜித அணிக்கு அழைக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.