ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என தாம் தெரிவித்த காரணத்தினால், அவர் ணில் விக்கிரமசிங்கவைப் பின்பற்றுபவர் என்றும் கட்சியை பிளவுபடுத்த தயாராகி வருவதாவும் தான் ராஜபக்சவுக்கு எதிரானவர் என்று சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை தாம் வன்மையாக நிராகரிப்பதாகவும் அரசாங்கக் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இந்த நேரத்தில் ரணிலைத் தவிர வேறு வழியில்லை அதற்காக தாம் ரணில் விக்கிரமசிங்கவுக்காக முன்னிற்பதாக அமைச்சர் கூறினார்.
தான் மனசாட்சிப்படி நடந்ததாக அமைச்சர் கூறினார்.
இது கட்சிக்கோ அல்லது ராஜபக்சேக்கோ எதிரானது அல்ல என்பதை வலியுறுத்திய அமைச்சர், நாட்டைப் பற்றி சிந்தித்து இந்தக் கருத்தை வெளியிடுவதாகக் கூறினார்.
கட்டான மற்றும் திவுலப்பிட்டிய முன்னாள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.