கொழும்பு துறைமுக நகரம் முழுமையான செயல்பாட்டு மட்டத்தின் போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.8 பில்லியன் அமெரிக்க டொலரை (தலாவீதம் 550 அமெரிக்க டொலர்) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்க்கும் வாய்ப்புள்ளது என்று
PwC இனங்கண்டுள்ளது
நவம்பர் 09, 2021 செவ்வாய்க்கிழமையன்று துறைமுக நகரத்தின் பொருளாதார விளைவு குறித்த சமீபத்திய மதிப்பீட்டை PwC, பொருளாதார ஆணைக்குழுவிடம் முன்வைத்துள்ளது.
வேலைவாய்ப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி, வெளிநாட்டு நேரடி முதலீடு, கொடுப்பனவுகளின் இருப்பு மற்றும் அரசாங்க வருமானம் ஆகிய ஐந்து முக்கிய பொருளாதார மாறுபாட்டு வடிவங்களில் கொழும்பு துறைமுக நகரத்தின் சாத்தியமான விளைவை இந்த
ஆய்வு மதிப்பீடு செய்கிறது.
2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்ப அறிக்கையைத் தொடங்கி, 2021 நவம்பரில் தற்போது புதுப்பிக்கப்பட்டமை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச்
சட்டம் மற்றும் இச்செயற்திட்டத்தை முன்னெடுக்கின்ற நிறுவனமான CHEC Port City Colombo (Pvt) Ltd இன் “ஐந்தாண்டு திட்டத்தை உருவாக்குவதற்கான மூலோபாயம் மூலம்
வழங்கப்பட்ட சிறப்புப் பொருளாதார வலய அந்தஸ்தின் விளைவை ஆராய்வதாக அமைந்துள்ளது.
துறைமுக நகரமானது தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பம், கப்பல்துறை சேவைகள், நிதியியல் சேவைகள் மற்றும் ஏனைய தொழில்சார் சேவைகள் போன்ற உயர் பெறுமதிமிக்க
நவீன சேவைகளில் கவனம் செலுத்துவதுடன், வேகமாக வளர்ந்து வரும் பிராந்தியம்,தொழிற்திறன் மிக்க திறமைசாலிகள் அணி, குறைந்த செலவுச் சூழல் மற்றும் விசேட
பொருளாதார வலய சட்டத்தால் வணிகம் செய்வதற்கான எளிமை அடங்கலாக இலங்கையின்மூலோபாய அமைவிடத்தின் அனுகூலத்தில் இது கவனம் செலுத்தியுள்ளது.
தற்போதுள்ள கொழும்பு மத்திய வர்த்தக மாவட்டத்தின் கடற்பரப்பின் விஸ்தரிப்பாக, துறைமுக நகரமானது நகர்ப்புற சுற்றுலாவிற்கு வலுவான இடமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடம்பர நகர ஹோட்டல்கள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட உல்லாச
விடுதி ஆகியவற்றிற்கான பிரதான திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள ஐந்து காணித் துண்டுகள்,கூட்டங்கள், ஊக்குவிப்பு நிகழ்வுகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள், படகுப் பயணம்,
மருத்துவ பெறுமதியுடனான பயணம், வணிகம் மற்றும் ஓய்வுநேரப் பயணிகளுக்குத் துணைபுரிவதற்காக கிட்டத்தட்ட 2,900 சாவிகளைக் கொண்ட தங்கும் அறைகளையும்
சேர்ப்பிக்கின்றது.
இந்த நகர்ப்புற வளர்ச்சி செயற்திட்டத்தின் மிகப் பாரிய அளவைக் கருத்தில் கொண்டு, அடுத்த 20 ஆண்டுகளில் படிப்படியாக நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், கூடுதல்
முதலீடாக 12.7 பில்லியன் தொகையையும் ஈர்க்கும். உலகளாவிய ரீதியில் போட்டித்தன்மை வாய்ந்த வணிகச் சூழலை வழங்குவது, துறைமுக நகரத்தின் (மற்றும் நாட்டின்) வளர்ச்சியை
எதிர்பார்க்கும் அளவிற்கு எடுத்துச் செல்லக்கூடிய வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் ஒரு முன்நிபந்தனையாக இருக்கும்.
துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தினால் இலங்கைக்கு கணிசமான நன்மைகள் கிடைத்து, கட்டுமானம் மற்றும் செயல்பாட்டு கட்டங்கள் திட்டமிட்டபடி நடைபெறுகின்றன என்பதை
ஆய்வு தெளிவாகக் காட்டுகிறது. துறைமுக நகர திட்டம் உள்ளூர் பொருளாதாரத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டால், நிர்மாண மற்றும் செயற்பாட்டு நிலைகள் தேசிய பொருளாதாரத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்களிக்கும்.
இது இலங்கையின் எதிர்கால அபிவிருத்திக்கான நெம்புகோலாகவும் அமையும். முழு அறிக்கையும் PwC இன் இணையதளம் மற்றும் சமூக ஊடக மார்க்கங்கள் மூலம் கிடைக்கப்பெறும்.