பாராளுமன்றத்தால் மின்சார சபைக்கு 6 மாதங்களுக்கு ஏழு கோடி ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார பொது ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவும் ஒன்பது இலட்சம் ரூபா மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தவில்லை எனவும், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தற்போது வரை அவர் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் வறிய மக்களின் வீடுகளில் மிகச் சிறிய மின்கட்டணத்தை செலுத்தாத குற்றத்திற்காக அவர்களின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், முடிந்தால் அமைச்சர் காஞ்சன விஜேசேகர, ஷிரந்தி ராஜபக்ஷவின் வீட்டில் மின்சாரத்தை துண்டிக்குமாறும்ரஞ்சன் ஜயலால் சவால் விடுத்துள்ளார்.
மின்சார சபையின் மறுசீரமைப்பு மற்றும் மின்சார சட்டத்திற்கு எதிராக மின்சார சபைக்கு முன்பாக துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.