தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் நுவரெலியா, போபத்தலாவை மற்றும் மெனிக்பாலம பண்ணைகளில் கேரட், கோவா மற்றும் முள்ளங்கி பயிர்கள் சிறப்பாக விளைந்துள்ளதாக தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் அதிகாரிகள் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவித்தனர்.
விவசாய அமைச்சுக்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களின் காணிகளிலும் மரக்கறிகளை பயிரிட விவசாய அமைச்சர் வழங்கிய பணிப்புரைக்கு அமைய தேசிய கால்நடை அபிவிருத்தி சபையினால் 25 ஏக்கரில் கேரட் மற்றும் கோவா பயிரிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த இரண்டு பண்ணைகளிலும் அதிக பயிர் அறுவடை செய்யப்பட்டு வருவதாக கால்நடை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.