நேர்மையான அரசியலை 1993இல் பிரேமதாச அவர்களுக்கு கொண்டு செல்ல முடியுமாக இருந்தால், பிரேமதாசவின் மகனுக்கு இரண்டு மடங்கு முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவர் சுஜீவ சேனசிங்க தெரிவித்திருந்தார்.
ஹொரவபதான தேர்தல் பிரசார மக்கள் சக்திப்பில் கலந்துகொண்டு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
“.. இன்று ஜேவிபியினர் எல்லாத்தரப்பும் ஒன்று எனக் கூறுகின்றனர். எங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஐக்கிய தேசியள் சக்தியின் தலைமைகளுக்கு வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. அவ்வாறு வாய்ப்புக்கள் கிடைத்திருந்தால் இன்று நாமும் தலைவர்கள் தான்..
இன்று ரணில் ராஜபக்சர்களின் உடைக்குள் ஒழிந்திருக்கிறார். எங்கள் முன்னாள் தலைவர் என்று கூறுவதில் வெட்கமடைகிறேன். இப்போது உங்கள் முன்னிலையில் தேர்ச்சியான தலைவர் ஒருவர் இருக்கிறார். திருட்டுப் பழிகள் இல்லை. கொலை குற்றங்கள் இல்லை. பாலியல் வன்புணர்வுகள் இல்லை..
1993இல் பிரேமதாச அவர்களுக்கு முடியுமாக இருந்தால், பிரேமதாசவின் மகனுக்கு இரண்டு மடங்கு முடியும் என்ற செய்தியினை நாட்டுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். அனங் மனங் வாணா.. பிரேமதாச யுகம் மீண்டும் எழுப்பப்படும்…
தாங்கள் ஜனதிபதியானதும் தங்கள் கட்சியில் உள்ள என்னைப் போன்ற பழமையான இளம் எம்பிக்கள் இருக்கின்றனர். விவசாய அமைச்சினை தாருங்கள் நம் செய்துகாட்டுவோம்.. “