கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலைகள் பாரியளவில் குறைவடைந்துள்ளதாக பொருளாதார நிலைய வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதன்படி, இன்று (22) காலை வரை காய்கறிகளின் விலை கணிசமாகக் குறைந்தாலும் அவற்றை வாங்குவதற்கு வியாபாரிகள் பற்றாக்குறையாகவே இருப்பதாக பொருளாதார மத்திய வர்த்தக சங்கம் தெரிவிக்கிறது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி மற்றும் 22ஆம் திகதி ஒரு கிலோ மரக்கறிகளின் மொத்த விற்பனை விலையை பின்வருமாறு…
மரக்கறி ஜனவரி 17 ஜனவரி 22
கோவா 640 – 650 350 – 380
லீக்ஸ் 600 – 700 250 – 300
கேரட் 1700 – 2500 600 – 900
தக்காளி 200 – 300 350 – 400
எலுமிச்சை 120 – 130 130 – 150
கத்திரிக்காய் 380 – 400 400 – 480