மரக்கறிகளின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளமை தொடர்பில் கருத்து தெரிவித்த வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ, மரக்கறிகளை இறக்குமதி செய்தால், கேரட், பீன்ஸ், லீக்ஸ் போன்ற மரக்கறிகளை 300 முதல் 350 ரூபா வரையில் மக்களுக்கு வழங்க முடியும் எனத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்;
“.. உணவுக் கொள்கைக் குழுவைக் கூட்டுமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவித்து, விவசாய அமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் குறைந்த விலையில் காய்கறிகளை வழங்க முடியுமா என விசாரித்தேன். காய்கறிகளின் விலையை ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதத்தில் குறைக்க உணவுக் கொள்கைக் குழுவில் ஒப்புக் கொண்டுள்ளனர். காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டால் ஒரு கிலோ லீக்ஸ், கேரட், பீன்ஸ் ஆகியவை ரூ. 300 முதல் ரூ. 350 இற்கு வழங்கலாம்..”