மக்கள் வங்கியினால் 54 பில்லியனை வாராக் கடனாக தள்ளுபடி செய்வது தொடர்பான விவாதம் சமூக வலைத்தளங்களில் இந்த நாட்களில் பேசப்பட்டு வருகிறது.
அரசியல்வாதிகள் மற்றும் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவே இவ்வாறு செய்யப்படுவதாக சமூக ஊடகங்கள் ஊடாக முன்னிலைப்படுத்தப்படுகிறது.
மக்கள் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் (கொள்கைகள்) ஏ.யு.எல்.ஏ.அன்சார் மற்றும் மக்கள் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் (தொழில்முனைவோர் வங்கியியல்) விக்கிரம நாராயண ஆகியோர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இணைந்து இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தனர்.
அந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது எனவும் தெரிவித்திருந்தனர்.
கடன் பெறும்போது ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுவார்கள் என்றும், கடனை செலுத்தாவிட்டால், அவர்களுக்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் சில கடனாளிகள் வந்து வங்கியில் பேசி மீண்டும் கால அட்டவணையை மாற்றிக் கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடனை செலுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.