தென் கொரிய நாடகங்களைப் பார்த்த இரண்டு 16 வயது இளைஞர்களுக்கு வடகொரியா 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் கொரிய திரைப்படங்கள், நாடகங்கள் மற்றும் பாடல்களுக்கு வடகொரியா தடை விதித்துள்ள நிலையில், இவ்வாறு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தென் கொரியாவின் திரைப்படங்கள், நாடகங்கள், தொலைக்காட்சி உள்ளிட்ட பாடல்கள் போன்றவற்றைப் பார்ப்பது வடகொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றைப் பார்ப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்க வடகொரியா செயல்பட்டு வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.