பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும் கெரட் சாக்குகளை பாதுகாக்க வியாபாரிகள் பணம் கொடுத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றன.
கேரட் சாக்குகளை பாதுகாக்கும் காவலாளி ஒருவருக்கு 1500 ரூபாய் செலுத்த வேண்டும் என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு வந்த வர்த்தகர் ஒருவர் கூறுகிறார்.
மேலும் சில பொருளாதார மையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் கேரட் சாக்குகளை திருடும் கும்பல் இருப்பதும் தெரியவந்துள்ளது.
ஒரு கிலோ கேரட் மொத்த விலையில் 1800 முதல் 2300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், காய்கறிகளின் விலை வேகமாக அதிகரித்து வருவதால், அன்றாடம் பொருளாதார மையங்களுக்கு வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை ஐம்பது சதவீதத்திற்கும் குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஏப்ரல் முதல் வாரத்தில் கேரட் விலை குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார மத்திய நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.