உலக அளவில் அதிக ஸ்மார்ட் போன்கள் விற்கும் நிறுவனம் என்று 12 ஆண்டுகளாக தக்கவைத்து இருந்த இடத்தை சாம்சங் நிறுவனம் இழந்தது
2010-க்கு பிறகு முதல் முறையாக தென்கொரியாவின் மிகப்பெரிய நிறுவனம் முதலிடத்தை இழந்துள்ளது. 2023-ல் ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் 20.1% ஆப்பிளின் ஐபோன் விற்பனையாகியுள்ளது. 2023-ல் ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் 19.4% சாம்சங் நிறுவன போன்கள் விற்பனையாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு 234 மில்லியனுக்கும் அதிகமான தொலைபேசிகளை விற்றது. ஆண்டுதோறும் நேர்மறையான வளர்ச்சியைக் காட்டும் டாப் 3 இல் உள்ள ஒரே வீரர் ஆப்பிள் மட்டும் முதன்முறையாக ஆண்டுதோறும் நம்பர் 1 இடத்தைப் பெறுகிறது