தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு இன்று (13) அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் மேற்படி விஜயம் அமைந்துள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுடன், சிரேஷ்ட சட்டத்தரணிகளான கனக ஈஸ்வரன் மற்றும் நிர்மலா சந்திரஹாசன் ஆகியோர் இந்த விஜயத்தில் பங்கேற்றுள்ளனர்.