எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளரை நிறுத்தாமல் இருக்கவும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அக்கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஊடகவியலாளர் – “ரணில் விக்கிரமசிங்க தேசிய வேட்பாளராகப் போட்டியிடுவதாகச் சொல்லப்படுகின்றது..?”
பதில் – “அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் பொது வேட்பாளர்.”
ஊடகவியலாளர் – “அப்போ உங்களது பொது வேட்பாளர்?”
பதில் – “இல்லை, நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை, ஒருவேளை எங்கள் கட்சி முன் அப்படி இல்லையென்றால் பொது வேட்பாளர் எங்களது கட்சியில் இல்லை..”