போத்தலில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தண்ணீர் ஆரோக்கியமற்றது என்றும், பிளாஸ்டிக் தண்ணீர் ஆரோக்கியமற்றது என்றும் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வின் மூலம், ஒரு தண்ணீர் போத்தலில் 2,40,000 நானோ பிளாஸ்டிக் கார்சினோஜெனிக் துகள்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதன்படி, ஒரு லீட்டர் போத்தல் நீரில் 110,000 முதல் 400,000 வரையிலான நானோ பிளாஸ்டிக் துகள்களும் 240,000 நச்சுத் துகள்களும் அடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிளாஸ்டிக் போத்தலில் இருந்து குடிநீரில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சிறிய புற்றுநோய் துகள்கள் இருப்பதாகவும் மேலும், நானோ பிளாஸ்டிக் துகள்கள் மிகவும் கரையக்கூடிய இரசாயன வகை என்றும், அவை மிக விரைவாக உடலுக்குள் நுழையும் திறன் கொண்டவை என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.