அவலோகிதேஸ்வர போதிசத்வா என அழைக்கப்படும் நபர் தனது உத்தியோகபூர்வ காரில் களனி ரஜமஹா விகாரைக்கு வந்து சீடர்கள் குழுவிற்கு உபதேசம் செய்தமையும் மக்கள் அவரிடம் ஆசிகளை பெறுவதையும் பிக்கு ஒருவரும் அவரை வணங்குவதையும் அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் வலம் வந்தது.
காலத்திற்கு காலம் இவ்வாறு மக்களை ஏமாற்றும் பல்வேறு நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் நடந்து வருகின்றமையையும் நாங்கள் கண்டுள்ளோம்.
தான் மரணித்து உயிர்த்தெழுந்த நபர் என அறிமுகப்படுத்தும் இவர் மஹிந்த கொடித்துவக்கு எனும் அம்பலந்தோட்டையில் பிறந்த ஒருவர். இவர் இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது எகிப்துக்கு செல்கிறார். அங்கு பிரபு ஒருவரின் வீட்டில் நாய்களுக்கு உணவு வழங்கியதாகவும் அவரே நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இவர் மேலும் கூறுகையில், யாருக்கும் திறக்க முடியாத கடவுளின் கதவினை அனைத்து மதங்களுக்கும் பொதுவான கதவு அது. அதனை தான் திறந்ததாகவும், இதனை இயேசுநாதருக்கு முடியவில்லை நபிகள் நாயகத்திற்கும் அல்லாஹ்வின் கதவினை திறக்க முடியாமல் போனது இவை அனைத்திற்கும் தன்னிடம் பதில்கள் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
தன்னை மனநோயாளி என ஊடகங்கள் சித்தரிப்பதாகவும் தான் அல்ல தன்னை வணங்கும் நபர்களிடம் அதனை கூறுவது தான் சிறந்தது என்றும் அவர் தெரிவித்திருந்தார். தான் களனி விகாரைக்கு சென்றதும் மக்கள் எனது கால்களில் விழுந்தமைக்கு தான் பொறுப்பேற்க முடியாது. அது அவர்களது நிலைமை என்றும் தெரிவித்திருந்தார்.
எனினும் அவரது கருத்துக்கள் மதங்களை நிந்திக்கும் வகையில் அமைந்துள்ளமை வெளிப்படையாக தெரிகின்றது.
அண்மையில் மதங்களுக்கு இடையே பிரச்சினைகளை தோற்றுவிக்கும் விடயங்கள் அதிகளவு இடம்பெறுகின்றமையும் விசாரணைகள் இடம்பெறுவதும் சகஜமாகிவிட்டது.