2024ம் ஆண்டு ஆரம்பித்தது தொடக்கம் மக்கள் பெருமளவு பேசுவது VAT அதிகரிப்பு மற்றும் வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் (TIN) பற்றி என்பது யாவரும் அறிந்ததொன்றே.
குறித்த VAT வரி அதிகரிப்புக்கும் TIN முறைமைக்கும் கட்சிகள் இன்று ஏட்டிக்கு போட்டியாக மேடையடித்து விமர்சிக்கிறார்கள்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க VAT வரியை 3% இனால் அதிகரித்ததுடன் வரி செலுத்துவோர் அடையாள எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் 18 வயதில் வழங்கத் தயாராகும் TIN இலக்கத்திற்குப் பதிலாக, தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பிறக்கும்போதே TIN எண்ணைக் கொடுத்து ஒவ்வொரு நபரையும் வரி வலையில் சிக்க வைக்கும் யோசனை ஒன்றினையும் முன்வைத்திருந்தது. இது அப்போது மிகவும் பாராட்டப்பட வேண்டிய கொள்கையாக அப்போது போற்றப்பட்டது. இன்று அதே வரிக்கொள்கையை விமர்சித்து வருகின்றனர். இதுதான் அரசியல் யுக்தி.