இலங்கையின் இரண்டாவது பெரிய ஆயுள் காப்புறுதி நிறுவனமான Softlogic Life ஆனது அதன் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், ஆளுகை மற்றும் பேண்தகைமை என்பனவற்றிற்கான தனது நிலைப்பாட்டினை உறுதிப்படுத்துவதன் மூலம், 58-வது CA TAGS விருது வழங்கல் விழாவினில் பல விருதுகளினைத் தனதாக்கிக் கொள்வதன் மூலம் சிறந்த செயல்திறனை வெளிக்காட்டியுள்ளது. மேலும் இந்நிறுவனமானது நான்கு முக்கிய விருதுகளினை தனதாக்கிக் கொள்வதன் மூலம், எம் நாட்டின் பலம் வாய்ந்த பெருநிறுவனங்களில் ஒன்றாக தனது திறமையினைப் பறைசாற்றியுள்ளது. இச்சாதனைகள், இலங்கையில் நிதி அறிக்கையிடல் நடைமுறைகளினை மேம்படுத்துவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகள் ஊடக நிறுவனத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் ஆளுகை என்பன வற்றிற்க்கு Softlogic Life இன் அர்ப்பணிப்பினை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.
உறுதிபாடற்ற சந்தை நிலவரம் மற்றும் கடினமான பொருளாதார நிலைமைகளின் சவால்களுக்கு முகம் கொடுத்த போதிலும், Softlogic Life ஆனது குறிப்பிடத்தக்க வெற்றியினைப் பெற்றுள்ளது, இது தொடர்ச்சியான அதன் வர்த்தகம் தொடர்பான வேகத்தையும் தனிச்சிறப்புவாய்ந்த நிதி ஆற்றலினையும் நிரூபிக்கின்றது. இச்சாதனைகள் இந்நிறுவனத்தினை இலங்கையின் காப்புறுதித் துறையில் மிகவும் செல்வாக்கு மிக்கதொன்றாகவும், எம்நாட்டின் பெருநிறுவனத் துறையின் உயர் மட்டத்திலும் செல்வாக்குமிக்க வீரராக நிலைநிறுத்தி இருக்கின்றது. CA TAGS விருதுகள் 2023 இல் அது தனதாக்கிக் கொண்ட விருதுகள் ஆவன, நிதி அறிக்கையிடலில் உயறிய தரத்தினைப் பராமரிப்பதில் Softlogic Life இன் உறுதிப்பாட்டினை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன, சவால்மிக்க சந்தை நிலவரங்களின் மத்தியிலும் கூட சிறந்து விளங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பினைக் காட்டுகின்றன.
வருடாந்த நிதி அறிக்கையிடலில் ஒட்டுமொத்த சிறப்பிற்கான வெள்ளி விருதினைத் தொடர்ந்தும் மூன்றாவது வருடமும் தனதாக்கிக் கொண்டதன் மூலம் Softlogic Life ஆனது மீண்டும் சிறந்து விளங்குகின்றது. மறுவடிவமைத்தல் எனும் தலைப்பினில் 2022 ஆண்டில் வெளியிடப்பட்ட இவ்அறிக்கைக்கு கிடைத்த அங்கீகாரமானது, இலங்கை வர்த்தக அரங்கில் நன்கு நிறுவப்பட்ட சில நிறுவனங்களிலிருந்து Softlogic Life ஐ வேறுபடுத்க் காட்டுகின்றது. வெளிப்படைத்தன்மை மற்றும் அனைத்து ஆர்வலர்களுக்கும் அதிகபட்ச மதிப்பினை வழங்குவதில் Softlogic Life இன் அசைக்க முடியா அர்ப்பணிப்பினை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையினில், இவ்விருதானது நிறுவனத்தினை அவர்களின் சிறந்த அறிக்கையிடல் நடைமுறைகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட பெருநிறுவனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவில் இடம் பெறச் செய்திருக்கின்றது.
உங்கள் சொந்த அறிக்கையினை நீங்களே தோற்றுவியுங்கள் போன்ற முன்முயற்சிகளில், ஆண்டு அறிக்கையில் விருப் வடிவமைப்புத் தன்மையில் உப – அறிக்கைகளை உருவாக்க அனுமதிக்கும் புதுமைக்கான Softlogic Life இன் அர்ப்பணிப்பானது தெளிவாகத் தெரிகின்றது. தொடர்ச்சியாக ஆறு வருடங்களாக, வருடாந்த அறிக்கையினை இலங்கையில் முதல் முதலில் வீடியோ பதிப்பினில் வெளியிட முழுமுதல் நிறுவனம் இதுவாகும். முதலீட்டாளர்களுக்கான பரஸ்பர உரையாடலினை மேற்கொள்ள Dashboard முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளது, இது பல்வேறு நிதி அளவீடுகளை ஒரே நேரத்தில் பகுப்பாய்வு செய்ய உதவுகின்றது. காப்புறுதித் துறையினில் தங்க விருது, ஒருங்கிணைந்த அறிக்கையிடலில் வெள்ளி விருது, பெருநிறுவனங்களின் ஆளுகை வெளிப்படுத்தலில் வெண்கல விருது ஆகியவற்றை Softlogic Life ஆனது பெற்றுள்ளது. இவ்விருதுகள், நிதி அறிக்கையிடல் துறையில் நிறுவனத்தின் சிறந்த நிலையினை உறுதிப்படுத்துகின்றன.
CA TAGS விருது வழங்கும் விழாவின் வெற்றி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த Softlogic Life இன் முகாமைத்துவப் பணிப்பாளராகிய Iftikar Ahamed அவர்கள் குறிப்பிடுகையில் CA Sri Lanka வருடாந்த அறிக்கை விருதுகளில் எமது சாதனைகள் எல்லாம் சவாலான காலங்களிலும் உண்மையான இயல்மாற்றம் ஊடக செழித்தோங்க முடியும் என்பதனையும் இது எடுத்துக்காட்டுகின்றன. இம்மதிப்பு வாய்ந்த விருதுகளினை வெல்வது என்பது கடினமான போட்டிச்சந்தை நிலைமைகளுக்கு மத்தியிலும், மென்மையான வாழ்க்கைக்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. நமது நாடு நிச்சயமற்ற பொருளாதாரச் சூழலுக்கு முகம் கொடுத்துக்கொண்டு இருக்கும் இத்தறுவாயில், இவ்விருதுகள் வெறும் அங்கீகாரத்தை விட அதிகத்தினை உட்படுத்துகின்றது. இவ்விருதுகள் வெறும் கௌரவங்களாக மட்டுமல்லாது, இத்தொழில்துறைக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளிப்பதாகவும் அமைந்துள்ளன என்று அவர் கூறினார்.
இலங்கையில் தொழில்துறையின் நெறிமுறைகளுக்கும் அப்பாலேயே சென்று, நிதி அறிக்கையிடலை மறுவரையறை செய்ததனை உறுதிப்படுத்தியதற்கு சான்றாக, Softlogic Life இன் 10வது ஒருங்கிணைந்த வருடாந்திர அறிக்கையானது அமைந்துள்ளது. 2013 ஆம் தொடக்கம், நிறுவனமானது தொடர்ச்சியாக அறிக்கையிடலை ஒருங்கிணைத்து வந்திருக்கின்றது. அதன் மதிப்பு மிக்க ஆர்வலர்களுக்கு விரிவான கணக்கு விபரங்களினை இற்றை வரை வழங்கி வந்துள்ளது. இவ்வறிக்கையில் Softlogic Life நிறுவனத்தின் புறச்சூழல், வெற்றிகாண் செயலத்திட்டம் , வள ஒதுக்கீடுகள் , வர்த்தக மாதிரிகள், செயல் நிறைவேற்றம், பெருநிறுவன ஆளுகை மற்றும் பிற இன்னோரன்ன முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய ஒரு முழுமையான பகுப்பாய்வு என்பன இவற்றுள் அடங்கும். இது சர்வதேச கட்டமைப்பு மற்றும் உலகளாவிய அறிக்கையிடல் முன்முயற்சி (GRI) “முக்கிய” தரநிலை விருப்பங்கள் போன்ற உலகளாவிய தரங்களுடன் தன்னார்வமாக இணங்குகின்றது. குறிப்பாக, ஒருங்கிணைந்த அறிக்கையிடல் குறித்த இலங்கையின் முழுமுதல் உறுதிப்படுத்தல் அறிக்கையினை மூன்றாவது ஆண்டாகவும் Softlogic Life ஆனது பெற்றுள்ளது. அதன் ஆர்வலர்களுக்கு நம்பகமான நிதி-சாரா தகவல்களினை வழங்குவதில் அதன் அர்ப்பணிப்பினை இது வலியுறுத்துகின்றது.
Softlogic Life இன் பிரதான நிதி பொறுப்பதிகாரியான Nuwan Withanage அவர்களின் கருத்திற்கிணங்க, நிதி அறிக்கையிடல் என்பது நிறுவனத்திற்கான முறைப்படுத்துகைக்கும் அப்பால் செல்லக்கூடியது என்றே கூறவேண்டும். வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், ஆளுகை, பேண்தகைமை மற்றும் ஆர்வலர்களின் நம்பிக்கையினைப் பேணுதல் என்பனவற்றினை அடித்தளமாகக் கொண்டு இவையாவும் செயல்படுகின்றன. சிக்கலான நிதி தகவல்களை தெளிவாகவும் மற்றும் அணுகக்கூடிய முறையிலும் திறம்படத் தெரிவிக்க தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அறிக்கையிடல் முறைகளினை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தினை அவர்கள் எடுத்துக்கூறினார். இவ் வகையான அணுகுமுறைகளானது , ஆர்வலர்களுக்கு அர்த்தமுள்ள மற்றும் வெளிப்படையான நிதி நுண்ணோக்கினை வழங்குவதனை நோக்காகக் கொண்டுள்ளது.
CA விருதுகளைத் தவிரவும், இவ்வருடம் தொகுப்பறிக்கையிடல் விருதுகள் 2023 இல் CMA Excellence போட்டியில் நாம் வெற்றியீட்டினோம். அதோடு கூட ஐந்து மதிப்பு வாய்ந்த விருதுகளையும் எமதாக்கிக் கொண்டோம். தொகுப்பறிக்கையிடன் சிறப்பிற்கான ஒட்டுமொத்த தங்கம் உட்பட ஐந்து விருதுகளையும், பல்வேறு அறிக்கையிடல் தளங்களில் உயறிய தரத்தினைப் பேணுதல் என்பன எமது பல்துறைத் திறமைகளினைப் பறைசாற்றுகின்றன. இவையாவும் எமது ஆர்வலர்களுக்கு வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் மதிப்பு என்பனவற்றினை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
CA Sri Lanka விருதுகள் ஆவன, நிறுவனங்கள் தமது ஆர்வலர்களுக்கு நிதி மற்றும் நிதி சாரா தகவல்களினை எவ்வளவு சிறப்பாகத் தெரிவிக்கின்றன என்பதனை அளவீடு செய்வதில் கவனம் செலுத்துகின்றது. இம்மதிப்பீட்டினில் சட்டப்பூர்வ தேவைகள் மற்றும் தற்போது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் நடைமுறைகளினை கண்டிப்பாக பின்பற்றுவதும் கவனத்தினில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. மதிப்பீட்டு செயல்பாட்டினில், CA Sri Lanka ஆனது நிறுவனத்தின் குறிக்கோள்கள், சிறப்பம்சங்கள், செயல்திறன், பணிபுரிவோர் மற்றும் முகாமைத்துவம் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட அனைத்து ஆர்வலர்களுக்கும் எவ்வாறு சிறந்த விதத்தினில் வழங்குகின்றது என்பதனை ஆராய்ந்து வருகின்றது.