follow the truth

follow the truth

December, 26, 2024
Homeவணிகம்TAGS விருதைப் வென்றுள்ள HNB FINANCE

TAGS விருதைப் வென்றுள்ள HNB FINANCE

Published on

இலங்கையின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவகத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் TAGS விருதுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் Shangri-La ஹோட்டலில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், HNB FINANCE ஆனது வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் பிரிவில் வெண்கல விருதை வென்றது (20 பில்லியனுக்கும் அதிகமாக சொத்து பெறுதியுடைய குழுமம்). TAGS விருது வழங்கும் நிகழ்வில் HNB FINANCE தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த விருதை வென்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பட்டயக் கணக்காளர் நிறுவகத்தால் (CA Sri Lanka) ஏற்பாடு செய்யப்பட்ட TAGS விருது வழங்கும் நிகழ்வு, இலங்கையில் உள்ள புகழ்பெற்ற நிறுவனங்களின் நிதிச் செயல்திறன் சமர்ப்பிப்புகளை ஆண்டுதோறும் மதிப்பீடு செய்வதன் மூலம் நிதி அறிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையில் சிறந்து விளங்குவதை அங்கீகரிக்கிறது. அதன்படி, HNB FINANCE இன் நிதி அறிக்கை மற்றும் அதன் வெளிப்படைத்தன்மை ஆகியவை வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் பிரிவில் விடாமுயற்சி, நடைமுறைவாதம், நேர்மறை என கருதப்படும் அம்சங்களில் மிகவும் அங்கீகரிக்கப்பட்டது.

HNB FINANCE தனது வருடாந்த அறிக்கையின் ஊடாக நிதிச் செயற்திறன் அறிக்கையிடலில் பின்பற்றப்பட வேண்டிய தரநிலைகளையும் வெளிப்படைத்தன்மையையும் பேணுவதன் மூலம் இத்துறையில் அளவீடுகளை விரிவுபடுத்துவதற்கு உழைத்துள்ளமை சிறப்பான விடயமாகும். இந்த விருதின் மூலம், நிதி அறிக்கையின் தரங்களைப் பாதுகாப்பதில் HNB FINANCE இன் அர்ப்பணிப்பு தெளிவாக நிரூபிக்கப்பட்டது மற்றும் துறையின் தரங்களைப் பாதுகாக்கும் நிறுவனங்களில் முன்னணியில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

TAGS விருதுகளில் நிறுவனத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியைப் பற்றி கருத்து தெரிவித்த முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத், “நிதி அறிக்கை தரநிலைகள் மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பாதுகாப்பதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வாய்ப்பாக இந்த விருதை நான் அழைக்க முடியும். இந்த விருதினூடாக, எமது சேவை நெறிமுறைகள் மற்றும் தொழில்துறையின் நிதி அறிக்கை தரங்களைப் பேணுதல் ஆகியவை TAGS விருதுக் குழுவினால் பாராட்டப்பட்டதுடன், TAGS விருதுக் குழுவிற்கும் இலங்கையின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவகத்திற்கும் எனது மரியாதையை செலுத்த விரும்புகிறேன். இந்த விருதுக்கு பங்களித்த அனைத்து தரப்பினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்தார்.

இலங்கையின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் பல வருடங்களாக நாட்டில் உள்ள புகழ்பெற்ற நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகளை மதிப்பீடு செய்து விருதுகளை வழங்கி வருகின்றது மேலும் 2022 ஆம் ஆண்டு முதல் இந்த வருடாந்த அறிக்கை விருது வழங்கும் நிகழ்வு TAGS விருது வழங்கும் நிகழ்வு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிதி மற்றும் நிதி அல்லாத துறைகளில் தகவல் அறிக்கையின் சர்வதேச விவரக்குறிப்புகளுக்கு ஏற்ப பல்வகைப்படுத்தல் பரிசீலிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Fashion Bug தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக LMD வாடிக்கையாளர் ஆய்வில் முதலிடத்தில்

இலங்கையின் விருப்பத்திற்குரிய பேஷன் வர்த்தகநாமமான Fashion Bug, LMD சஞ்சிகையின் 2024 வாடிக்கையாளர் விசேடத்துவ ஆய்வில் தொடர்ச்சியாக இரண்டாவது...

ஒக்டோபரில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் அதிகரிப்பு

இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி, 2024 ஒக்டோபரில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் 1,097.1 மில்லியன் அமெரிக்க...

HNB Finance இன் “வளர்ச்சிக்கான முன்னேற்றத்தின்” மற்றுமொரு நிதியறிவு பயிற்சிப்பட்டறை நட்டம்புவை மற்றும் நுவரெலியாவில்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB Finance PLC, நுரெலியா மற்றும் நிட்டம்புவை நகரங்களை மையமாகக் கொண்டு...