follow the truth

follow the truth

December, 26, 2024
Homeவணிகம்நவலோக ஹாஸ்பிடல்ஸ் குழுமம் Daiki Lanka (Pvt) Ltd உடன் கைகோர்த்து ஜப்பானுக்கு தாதி ஊழியர்களை...

நவலோக ஹாஸ்பிடல்ஸ் குழுமம் Daiki Lanka (Pvt) Ltd உடன் கைகோர்த்து ஜப்பானுக்கு தாதி ஊழியர்களை வழங்க உள்ளது

Published on

21 டிசம்பர் 2023 அன்று, கொழும்பு நவலோக மருத்துவமனை, Daiki Lanka (Pvt) Ltd உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கைச்சாத்திட்டுள்ளது, இது இலங்கையின் சுகாதாரத் துறையில் திறமையான தாதியர்களுக்கான தொழில்முறை பயிற்சி மற்றும் உயர் நிபுணத்துவ தரநிலைகளை அமைக்கும் பயணத்தில் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது.

உலகில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தாதியர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. ஜப்பானிய அரசாங்கம் தனது முதியோர் சமூகத்தை பராமரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. Daiki Group ஜப்பானில் தேவைப்படும் மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக முதியோர் பராமரிப்பு இல்ல வசதிகள் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்குகிறது.

2050 ஆம் ஆண்டில் ஜப்பானின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய மக்கள்தொகையின்படி, அவர்களுக்கு 2 தொடக்கம் 2.5 மில்லியன் தாதியர்கள் தேவை. கையொப்பமிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜப்பானில் பணியாற்றத் தேவையான தொழில்முறை திறன்மிக்க தாதியர்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு நவலோக வைத்தியசாலை குழுமத்தின் பணிப்பாளர்/பொது முகாமையாளர் பேராசிரியர் லால் சந்திரசேன மற்றும் Daiki Lanka (Pvt) Ltd இன் முகாமைத்துவ பணிப்பாளர் யோசுகே நகமுரா ஆகியோரால் கொழும்பு நவலோக வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கொழும்பு நவலோக வைத்தியசாலையை பிரதிநிதித்துவப்படுத்தி நிறுவன தலைவர் துவான் ஜமாலன் மற்றும் பயிற்சி முகாமையாளர் சுதந்த செனவிரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பேராசிரியர் லால் சந்திரசேன, நவலோக்க வைத்தியசாலையில் தேசிய தொழில் தகுதி (NVQ) மற்றும் மருத்துவ அனுபவத்துடன் ஜப்பானில் தாதியாக பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஜப்பானிய மொழி, கலாச்சாரம் மற்றும் சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு ஜப்பானில் வேலை விசாவைப் பெறுவதற்கு Daiki Lanka உடன் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தையும் அவர் குறிப்பிட்டார்.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Fashion Bug தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக LMD வாடிக்கையாளர் ஆய்வில் முதலிடத்தில்

இலங்கையின் விருப்பத்திற்குரிய பேஷன் வர்த்தகநாமமான Fashion Bug, LMD சஞ்சிகையின் 2024 வாடிக்கையாளர் விசேடத்துவ ஆய்வில் தொடர்ச்சியாக இரண்டாவது...

ஒக்டோபரில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் அதிகரிப்பு

இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி, 2024 ஒக்டோபரில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் 1,097.1 மில்லியன் அமெரிக்க...

HNB Finance இன் “வளர்ச்சிக்கான முன்னேற்றத்தின்” மற்றுமொரு நிதியறிவு பயிற்சிப்பட்டறை நட்டம்புவை மற்றும் நுவரெலியாவில்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB Finance PLC, நுரெலியா மற்றும் நிட்டம்புவை நகரங்களை மையமாகக் கொண்டு...