இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹிட்லருக்கு சமன் என துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் (Recep Tayyip Erdoğan) தெரிவித்துள்ளார்.
காஸா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களும், பலஸ்தீன பொதுமக்களை அப்பட்டமாக கொன்று குவிப்பதும், யூத மக்களை ஹிட்லரின் கொடூரமான கொலைக்கு சமம் என்று துருக்கி ஜனாதிபதி எர்டோகன் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஹமாஸ் தீவிரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதல்களால் காஸா பகுதியில் பலஸ்தீன குழந்தைகள் மற்றும் பெண்கள் உயிரிழந்ததை சகித்துக்கொள்ள முடியாது என்றும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உட்பட காஸா பகுதி மீதான தாக்குதலுக்கு உத்தரவிட்டவர்கள் அனைவரையும் சகித்துக் கொள்ள முடியாது என்றும் துருக்கி ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அங்காராவில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பங்கேற்ற துருக்கி ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.