follow the truth

follow the truth

October, 18, 2024
HomeTOP2அரச மாடிக்குடியிருப்பு வீடுகளின் உரிமம் தொடர்பிலான அறிவித்தல்

அரச மாடிக்குடியிருப்பு வீடுகளின் உரிமம் தொடர்பிலான அறிவித்தல்

Published on

அரச மாடிக்குடியிருப்புக்களின் வீடுகளின் உரிமத்தை மக்களுக்கு வழங்கும் கொள்கை ரீதியான தீர்மானத்தைத் துரிதப்படுத்த வேண்டும் என தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

அது தொடர்பிலான பிரச்சினைகளை நிவர்த்திக்கும் நோக்கில் விரைவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் உரிய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

காணி உரிமம் வாயிலாக மக்களுக்கு அரச மாடிக் குடியிருப்புக்களின் வீட்டு
உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே சாகல ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய 2024 ஆம் ஆண்டுக்குள் 8,351 வீடுகளுக்கான உரிமைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதோடு, அது தொடர்பிலான பிரச்சினைகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

காணி உரிமை தொடர்பில் எழுந்திருக்கும் பிரச்சினைகள், அதற்கான விடுவிப்பு பத்திரங்கள், சான்றிதழ்கள் தொடர்பிலான பிரச்சினைகள், பிணையாளர் மற்றும் பரிந்துரைகள் ஆகிய பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“எங்கள் தலைவர் சின்வார் உயிருடன் இருக்கிறார் – இஸ்ரேலின் வதந்திகள் எம்மை பலவீனப்படுத்தாது ” – ஹமாஸ்

கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹமாஸ் தலைவர் யஹ்யா...

எல்பிட்டியவில் தபால் மூல வாக்குகளை குறிக்கும் மேலதிக நாள் இன்றாகும்

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் மேலதிக நாள் இன்று (18) செயற்படுகின்றது. கடந்த 14ஆம்...

பொதுத் தேர்தல் வேட்பாளர்களுக்கான விசேட அறிவிப்பு

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது செலவு மற்றும் வருமானப் பதிவேடுகளைப் பேணுவதற்கு தனி நபரை நியமிப்பது பொருத்தமானது...