ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் குற்றம்சாட்டியுள்ளது.
பெர்த்தில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் கையில் கருப்பு பட்டை அணிந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காஸா பகுதியில் நடக்கும் குற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தாம் இவ்வாறு அணிந்ததாக உஸ்மான் கவாஜா முன்னர் தனது X தளத்தில் தெரிவித்திருந்தார்.
அனுமதியின்றி இதுபோன்ற செயலைச் செய்ததற்காக கவாஜா உடை மற்றும் உபகரண மீறல்களின் கீழ் தண்டிக்கப்படுவார் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இணைப்புச் செய்தி
கவாஜாவின் காலணிகளை கழற்றுமாறு ஐசிசி உத்தரவிட்டது ஏன்?