வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்திலான இலங்கை – நேபாள கூட்டு ஆணைக்குழுவின் ஆரம்ப அமர்வில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று(20) காத்மண்டு பயணமானார்.
இருநாடுகளுக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் அமர்வில் இலங்கை சார்பில் கலந்துகொள்ளவிருக்கும் உயர்மட்டக்குழுவுக்குத் தலைமைதாங்கவுள்ள அமைச்சர் அலி சப்ரி, நேபாள வெறியுறவுத்துறை அமைச்சர் நாராயண் பிரகாஷ் சவுத்துடன் இணைந்து இலங்கை – நேபாள கூட்டு ஆணைக்குழுவின் ஆரம்ப அமர்வுக்கு இணைத்தலைமை தாங்குவார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இவ்விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேபாளத்திலுள்ள புலம்பெயர் இலங்கையர்களையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.