விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் பிணை மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 04 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கு இன்று (20) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபென்டி முன்னிலையில் அழைக்கப்பட்டதை அடுத்து இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.