எதிர்வரும் பாடசாலை விடுமுறைகள் முடிவடைவதற்குள் பாடசாலைகளைச் சுற்றியுள்ள மாணவர்களுக்கு, தீங்கு விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து இடங்களும் அகற்றப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“ஒவ்வொரு பாடசாலையிலிருந்தும் 500 மீட்டருக்குள் மாணவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை விற்கும் அனைத்து இடங்களும் மீண்டும் பாடசாலை தொடங்கும் போது இருக்க அனுமதிக்கப்படாது. இது தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தீங்கு விளைவிக்கும் அனைத்தும் அகற்றப்படும்.”
எதிர்வரும் பாடசாலை விடுமுறை நாட்களில் அவ்வாறான இடங்களை சோதனை செய்து அகற்றுமாறு பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்