எதிர்வரும் வார இறுதியில் கொழும்பின் பல பிரதேசங்களுக்கு 28 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி கொழும்பு 04, 05, 06, 07 மற்றும் 08 கோட்டை ,கடுவலை மாநகர சபை,மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகர சபை அதிகாரப்பிரிவுகளுக்கு நவம்பர் மாதத்தின் 13 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8 மணி தொடக்கம் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.