ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா நேற்று (14) டெஸ்ட் போட்டிக்கு முந்தைய பயிற்சியின் போது ‘அனைத்து உயிர்களும் சமம்’ மற்றும் ‘சுதந்திரம் மனித உரிமை’ என எழுதப்பட்ட ஜோடி காலணிகளை அணிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்ததை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு கையில் கருப்பு பட்டையுடன் விளையாடினார்.
காஸா பகுதியில் இராணுவ சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் எழுப்பும் வகையில், கவாஜா இதுபோன்ற செய்திகள் அடங்கிய காலணிகளை அணிந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், அந்த காலணிகளை அணிந்துகொண்டு போட்டியில் விளையாட முடியாது என ஐசிசி இனால் தெரிவிக்கப்பட்டது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முடிவைத் தொடர்ந்து, கவாஜா குறித்த காலணிகளை அணிந்து போட்டியில் விளையாட மாட்டார் என்று ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் உறுதி செய்தார்.
பின்னர், தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட கவாஜா, “நான் எனது காலணியில் எழுதியது அரசியல் அல்ல. நான் பக்கச்சார்பு எடுக்கவில்லை. மனித உயிர்கள் எனக்கு சமம். ஒரு யூதனின் உயிரும் ஒரு முஸ்லிமின் உயிரும் சமம். அதேபோல் தான் ஹிந்து ஒருவனின் உயிரும், குரல் இல்லாதவர்களுக்காக நான் பேசுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “ஐ. சி. சி தனது காலணிகளில் உள்ள குறிப்புகளை ஒரு அரசியல் அறிக்கையாகக் கருத்தில் கொண்டிருந்தாகும் அது தொடர்பில் எனக்கு நம்பிக்கையில்லை. இது ஒரு மனிதாபிமான வேண்டுகோள். அவர்களின் கருத்து மற்றும் முடிவை நான் மதிக்கிறேன், ஆனால் அந்த முடிவுக்கு எதிராக போராடி ஒப்புதல் பெற முயற்சிப்பேன்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
All Lives are Equal. Freedom is a Human right. I’m raising my voice for human rights. For a humanitarian appeal. If you see it any other way. That’s on you… pic.twitter.com/8eaPnBfUEb
— Usman Khawaja (@Uz_Khawaja) December 13, 2023