follow the truth

follow the truth

September, 8, 2024
Homeவணிகம்இலங்கை ஃபைனான்ஸ் ஹவுஸ் சங்கத்தின் வருடாந்த விளையாட்டு விழா இந்த ஆண்டு பிரமாண்டமான முறையில் நடைபெற்றது

இலங்கை ஃபைனான்ஸ் ஹவுஸ் சங்கத்தின் வருடாந்த விளையாட்டு விழா இந்த ஆண்டு பிரமாண்டமான முறையில் நடைபெற்றது

Published on

இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்களை உள்ளடக்கிய இலங்கை ஃபைனான்ஸ் ஹவுஸ் சங்கம் (The Finance Houses Association of Sri Lanka -FHAS), வருடாந்த விளையாட்டு விழா 11வது முறையாக கொழும்பு-7 புளூம்ஃபீல்ட் மைதானத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது, மற்றும் இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட 28 நிதி நிறுவனங்கள் இந்த விளையாட்டில் கலந்து கொண்டன.

2019க்குப் பிறகு ஏற்பட்ட கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விளையாட்டு விழா பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இலங்கை ஃபைனான்ஸ் ஹவுஸ் சங்கத்தின் தலைவர் ஆனந்த செனவிரத்ன, இலங்கையின் வருடாந்த விளையாட்டு விழாவின் தலைவர் சமிந்த பிரபாத் உட்பட நிதி நிறுவனங்களின் உயர்மட்ட முகாமைத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல முக்கியஸ்தர்களுடன் 28 நிதி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெரிய குழு உறுப்பினர்கள். இலங்கை ஃபைனான்ஸ் ஹவுஸ் சங்கத்தின், FHA வருடாந்த விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். பிரதம அதிதிகளாக இலங்கை மத்திய வங்கியின் வங்கியல்லாத நிதி நிறுவன மேற்பார்வை திணைக்களத்தின் உதவி ஆளுநர் ஜே.பி.ஆர் கருணாரத்ன மற்றும் இலங்கை மத்திய வங்கியின் வங்கி அல்லாத நிதி நிறுவன மேற்பார்வை திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி ஆர்.எம்.சி.எச்.கே. ஜயசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர். FHA போட்டித் தொடரின் ஒட்டுமொத்த வெற்றிக் கேடயத்தை LOLC 275 புள்ளிகளுடன் வென்றது. 225 புள்ளிகளைப் பெற்ற கொமர்ஷல் கிரெடிட் நிறுவனம் இரண்டாவது இடத்தையும், 175 புள்ளிகளைப் பெற்ற சிட்டிசன் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் மூன்றாம் இடத்தையும் பெற்றன. விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கிரிக்கட் கிண்ணத்தை எல்.பி. பினான்ஸ் அணியும், பெண்களுக்கான கிண்ணத்தை சியப்பத பினான்ஸ் அணியும் வென்றன. போட்டியின் கைப்பந்து சாம்பியன்ஷிப்பை கொமர்ஷல் கிரெடிட் மற்றும் வலைப்பந்து சாம்பியன்ஷிப்பை CDB வென்றது. கொமர்ஷல் கிரெடிட் கம்பனியைப் பிரதிநிதித்துவப்படுத்திய திரு. பி.எச்.தினேஷ் இலங்கை ஃபைனான்ஸ் ஹவுஸின் இளவரசராகவும், எச்.என்.பி ஃபினான்ஸ் பி.எல்.சியின் சச்சினி குணசேகர இலங்கை ஃபைனான்ஸ் ஹவுஸின் இளவரசியாகவும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஃபைனான்ஸ் ஹவுஸ் சங்கத்தின் தலைவர் ஆனந்த செனவிரத்ன, இவ்வருடம் நடைபெற்ற FHA விளையாட்டுப் போட்டியின் வெற்றி குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை ஃபைனான்ஸ் ஹவுஸ் சங்கத்தின் தற்போதைய தலைவர் என்ற வகையில், இந்த மாதிரியான விளையாட்டுப் போட்டிகளை ஒழுங்கமைத்து நடத்த முடிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு விளையாட்டுப் போட்டி 5 ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இலங்கையிலுள்ள பெருமளவிலான நிதி நிறுவனங்களின் ஆர்வத்துடன் பங்குபற்றியதன் மூலம் இவ்வருடம் இந்த நிகழ்வை மிகவும் வெற்றிகரமாக நடத்த முடிந்தது.

நிதி நிறுவனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை பேணுவதும், உழைக்கும் உறுப்பினர்கள் தங்கள் விளையாட்டுத் திறனை வளர்த்துக்கொள்ளவும், பிஸியான பணிச்சூழலில் இருந்து மனதை சீராக்கிக் கொள்ளவும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததன் முக்கிய நோக்கமாகும். இந்த விளையாட்டு விழாவை மிகவும் வெற்றிகரமாக நடத்த முடிந்ததன் மூலம் நாங்கள் எங்களின் இலக்கை அடைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். எங்களின் அழைப்பை ஏற்று இந்நிகழ்வில் பங்குபற்றுவதற்காக இலங்கை மத்திய வங்கியின் வங்கியல்லாத நிதி நிறுவன மேற்பார்வை திணைக்களத்தின் உதவி ஆளுநர் ஜே.பி.ஆர். கருணாரத்ன மற்றும் வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் திருமதி ஆர்.எம்.சி.எச்.கே. ஜயசிங்க ஆகியோருக்கு நான் நன்றி கூறுகின்றேன்.” என தெரிவித்தார்.

FHA விளையாட்டுப் போட்டிகளின் தலைவர் சமிந்த பிரபாத் கருத்து தெரிவிக்கையில், 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒரு நாடாக நாம் எதிர்கொண்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில், இலங்கையை சீராக வழி நடத்துவதற்கு ஆதரவளித்த அனைத்து தரப்பினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு ஃபைனான்ஸ் ஹவுஸ் கேம்ஸ் மற்றும் இதுபோன்ற போட்டிகளுக்கு நிதியுதவி வழங்கி ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நிறுவனங்களையும் மரியாதையுடன் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். நிதித்துறையில் பல பாரிய பொறுப்புகளை சுமந்து வரும் நாங்கள், பரஸ்பர ஒத்துழைப்பையும், சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் வளர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விளையாட்டு விழாவை சிறப்பாக நடத்த ஒன்றிணைந்த அனைத்து நிதி நிறுவன ஊழியர்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு நாம் இதுவரை நடத்தியவற்றில் அதிக எண்ணிக்கையிலான நிதி நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் பங்கேற்புடன் இந்த விளையாட்டு விழாவை நடத்த முடிந்தது. மேலும், விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

இந்த ஆண்டு நடைபெற்ற FHA கேம்களுக்கு Sanasa General Insurance Company மற்றும் Huawei Cloud ஆகியவை பிரதான அனுசரணை வழங்கின, மேலும் HNB ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் HNB அஷ்யூரன்ஸ் ஆகியவை பிளாட்டினம் அனுசரணையாளர்களாக இருந்தன. வெள்ளி அனுசரணையாளராக மஹிந்திரா, ஐடியல் ஃபினான்ஸ் இருந்ததுடன் இலங்கை லீசிங் அசோசியேஷன், ஹெர்குலியன் செக்யூரிட்டி, அர்ஜுனா கிராபிக்ஸ், ஐகென் பிரைவேட் லிமிடெட், ஷோக்மன் சமரவிக்ரம, கான்டினென்டல் இன்சூரன்ஸ், டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பெனி ஆகியவையும் அனுசரணை வழங்கின.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடன் தள்ளுபடி குறித்த பொய்யான வதந்திகள் தொடர்பில் மக்கள் வங்கி விடுத்துள்ள அறிவித்தல்

ரூபா 54 பில்லியன் தொகை அறவிட முடியாக் கடன்களை மக்கள் வங்கி தள்ளுபடி செய்துள்ளதாக குற்றஞ்சாட்டும் வகையில் சமீபத்தில்...

சந்தையில் இணை இறக்குமதி பொருட்களால் இலங்கையின் வரி வருவாய்க்கு அச்சுறுத்தல்

அங்கீகரிக்கப்படாத உத்தியோகபூர்வமற்ற சந்தை இறக்குமதிகள் இலங்கையின் வரி வருவாயில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நுகர்வோரிடையே காணப்படும் குறைந்த விலை...

6 மாதங்களில் 9 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானம்

இந்த வருடத்தின் கடந்த ஆறு மாதங்களில் ஒன்பது (9) பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளதாக முதலீட்டு...