காஸா மீது நடத்திய குண்டுத்தாக்குதல்களினால் இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழக்கத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்திவரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், காஸாவில் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளதோடு, அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.