ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் Clare O’Neil, 10 ஆண்டுகளுக்கான குடியேற்றத் திட்டத்தை இன்று வெளியிட்டார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.
2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 250,000 புலம்பெயர்ந்தோர் மட்டுமே நாட்டிற்கு வர வாய்ப்புள்ளது என்றும் அந்த எண்ணிக்கை கொவிட் தொற்றுநோய்க்கு முன்பு இருந்ததைப் போலவே இருப்பதாகவும் நாட்டின் ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.
அதன்படி, இரு நாடுகளில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களுக்கான விசா விதிகளை கடுமையாக்கவும் அவுஸ்திரேலிய உள்ளூர் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.