ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுவாரா அல்லது தனிக்கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவாரா என்பதை அறிவிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் எனத், தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரா என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்றார்.
மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,
“..இது தொடர்பில் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை அறிவித்த பின்னர், அவருக்கு ஆதரவளிப்பதா அல்லது பொருத்தமான வேறு ஒருவரை நியமிப்பதா என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானிக்கும். அதன்பின்னர் எமது கட்சி உறுப்பினர்களும் தமது நிலைப்பாட்டை தீர்மானிக்கலாம்.எனினும் எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் பங்குபற்றக்கூடிய வகையில் எமது கட்சி பலப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இராஜதந்திரப் பணிகளுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம்.
இன்று அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைக்கு அமைய செயற்பட வேண்டியுள்ளது. இன்று மது பாட்டிலின் விலை கூட அவர்களால்தான் தீர்மானிக்கப்படுகிறது. எந்தவொரு அரசாங்க நிறுவனமும் நட்டத்தை ஏற்படுத்த முடியாது என சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. இதனால் பல ஆண்டுகளாக பலகோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து வந்த மின்சார வாரியம் தற்போது லாப நஷ்டம் என்ற சீரான நிலையை அடைந்துள்ளது.
இன்று வாழ்க்கை சுமை அதிகமாக உள்ளது. வரிச்சுமை அதிகமாக இருப்பதாக சிலர் முறையிடுகின்றனர். ஒரு சதவீத வரியை கூட உயர்த்தாத தலைவரை போராடி வீட்டுக்கு விரட்டியடித்தார் என்றால் நாட்டு மக்களுக்கு வரி செலுத்துவதே ஒரே பதில்..” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.