ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அதன்படி, அவர் இம்முறை 5வது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்.
உக்ரைனுக்கு எதிராக போராடி வரும் தனது ராணுவ வீரர்களுக்கு நேற்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் 71 வயதான ஜனாதிபதி புடின், 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
200ஆம் ஆண்டு ரஷ்யாவின் ஜனாதிபதியாக பதவியேற்று, 08 வருடங்கள் பிரதமராக பதவி வகித்து 24 வருடங்களாக ரஷ்யாவின் தலைவராக இருந்த ஜனாதிபதி புடின், ஜோசப் ஸ்டாலினுக்குப் பிறகு ரஷ்யாவை அதிக காலம் ஆட்சி செய்த தலைவர் என்ற சாதனைகளில் இணைந்துள்ளார்.
2024 ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் 15 முதல் 17 வரை நடைபெறும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.