தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒட்டகச்சிவிங்கி உயிரிழந்துள்ளது.
ஒட்டகச்சிவிங்கி இறக்கும் போது அதற்கு சுமார் 30 வயது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வாமை காரணமாக இந்த விலங்கு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.