ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (30) டுபாய் செல்லவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு இன்று முதல் டிசம்பர் 12 ஆம் திகதி வரை துபாய் எக்ஸ்போ சிட்டியில் அரசு தலைவர்கள், பொது தனியார் துறை பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்கிறது.
பாதிக்கப்படக்கூடிய மற்றும் வளரும் நாடுகளுக்கான காலநிலை நீதி மன்றத்தை நடைமுறைப்படுத்துவது உட்பட 03 முன்மொழிவுகளை இந்த மாநாட்டில் சமர்ப்பிக்க இலங்கை திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வருட மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மூவரும், எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இருபது இளைஞர் பிரதிநிதிகள் மற்றும் எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் துறையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் ஊடகங்களின் குழுவும் ஐநா காலநிலை மாற்ற மாநாட்டில் அரசாங்கத்திற்கு எந்த செலவும் இல்லாமல் பங்கேற்க உள்ளனர்.