follow the truth

follow the truth

November, 28, 2024
HomeTOP1ஆளுநர் பதவிகளில் மாற்றம் என்பது உண்மையா?

ஆளுநர் பதவிகளில் மாற்றம் என்பது உண்மையா?

Published on

நீதிமன்றால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ஹாபிஸ் நஸீர் அஹமட் இற்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் வழக்கு தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் அவருடைய நாடாளுமன்ற பதவி பறிக்கப்பட்டது.

இந்த நிலையில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானை ஊவா மாகாண ஆளுநராக நியமித்து விட்டு , அதற்கு பதிலாக ஹாபிஸ் நஸீரை கிழக்கு ஆளுனராக,ஜனாதிபதி நியமிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பகிரப்பட்டுள்ளன.

எனினும், அடுத்த தேர்தல் வரை கிழக்கு ஆளுனர் உள்ளிட்ட ஆளுனர் பதவிகளில் எவ்வித மாற்றமும் செய்யும் எண்ணம் ஜனாதிபதிக்கு இல்லை என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘பவுலிங் ஆக்‌ஷன்’ அன்று முரளிதரன், இன்று ஜஸ்பிரிட் பும்ரா..

இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதனின் பவுலிங் ஆக்‌ஷன் மீது சந்தேகத்தை வெளிப்படுத்தி அவரை பலவீனப்படுத்த முயன்றதை போல், தற்போது...

சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையும் ஒத்திவைப்பு

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக டிசம்பரில் நடைபெறவிருந்த இலங்கை சட்டக்கல்லூரி பொது நுழைவுப் பரீட்சை (2024) பிற்போடுவதற்கு...

உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு

சீரற்ற வானிலை காரணமாக கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை மேலும் மூன்று நாட்கள் பிற்போடப்படுவதாக பரீட்சை திணைக்களம்...